திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் வரட்டும் – அமைச்சர் ராஜ கண்ணப்பன்

Congress join DMK, let it come - Minister Raja Kannappan

சென்னை, பிப்ரவரி 12:

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.இந்த கூட்டணி தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றியும் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பிரதான கட்சியாக இடம்பெற்றுள்ளது.

பல ஆண்டுகளாக தொடரும் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர், தங்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்து வருகிறார்கள். இந்த கூட்டணி தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றியும் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பிரதான கட்சியாக இடம்பெற்றுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளை தவிர உள்ளாட்சி மற்றும் வாரியங்களில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை தரவில்லை என்று காங்கிரஸ் கட்சியில் ஒருசாரார் கருதுகின்றனர்.

அதேபோன்று 2006-ம் ஆண்டு தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெறாத நிலையிலும் காங்கி ரஸ் கட்சி வெளியில் இருந்துதான் ஆதரவு தெரிவித்ததே தவிர, ஆட்சி அதிகாரத்தில் அவர்க ளுக்கு பங்கு கிடைக்கவில்லை என்பதும் இவர்களின் தீராத ஆதங்கமாக இருந்து வருகிறது.

இதனிடையே புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய், தங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று கருத்து தெரிவித்தார்.விஜய்யின் இந்த கருத்து. இந்த கோரிக்கையை முன்னெடுத்து வரும் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்தது. அதைத்தொடர்ந்து, ஆட்சி அதிகா ரத்தில் பங்கு என்ற கோஷம் வலுக்கத் தொடங்கியது.

எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் போன்றவர்கள் இந்த கோரிக்கையை வெளிப்படையாக முன்வைத்து கருத்து தெரிவித்தனர். இதனிடையே ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்துக்கு சரிவராது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். மேலும் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக உள்ளது, சிலர் குழப்பத்தை ஏற்படுத்த சதி செய்வதாக சென்னையில் இந்தியா டுடே நடத்திய அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

இந்தநிலையில், காங்கிரஸ் உடனான கூட்டணி பற்றி முதல்-அமைச்சர் பேசிக்கொள்வார். அவர்கள் வந்தால் வரட்டும். வராவிட்டால் போகட்டும். கூட்டணியை நம்பி கட்சி நடத்த முடியாது என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார்.

Related posts

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை!

நாங்குநேரி கொலை சம்பவத்திற்கு விஜய் கடும் கண்டனம்..!