பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் மரியாதை

CM Stalin tribute to Perarignar Anna

சென்னை, செப்டம்பர் 15:

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் துணை முதல்வர் மற்றும் பிற அமைச்சர்களும் கலந்து கொண்டு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், தனது சமூக வலைத்தளத் தளமான எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழன்னை தந்திட்ட தலைமகன்!

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா, தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை