சென்னை, ஆகஸ்ட் 20:
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 50வது திருமண நாளை கொண்டாடுகிறார். 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ந் தேதியன்று ஸ்டாலின், துர்காவதியை மணந்து கொண்டார்.
திருமண வாழ்க்கையின் 50வது ஆண்டை நெகிழ்வுடன் கொண்டாடும் ஸ்டாலின் துர்காவதியுடன், திமுக நிறுவனர் அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு இன்று நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
50வது திருமணநாளை கொண்டாடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.