சென்னை, ஆகஸ்ட் 04:
டெல்லி காவல்துறை வங்க மொழியை “வங்கதேச தேசிய மொழி” எனக் குறிப்பிட்டதற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
டெல்லி காவல்துறை, வங்க மொழியைப் பேசும் எட்டு பேரை கைது செய்து விசாரணை நடத்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என மேற்கு வங்க மாநிலத்தின் அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்லமான வங்கா பவனுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், “வங்க மொழி, வங்கதேச தேசிய மொழி” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அவர், “வங்க மொழி நமது தாய்மொழி; ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரும் பேசிய மொழி; தேசிய கீதமும் தேசிய பாடலும் எழுதப்பட்ட மகிமை பெற்ற மொழி” என்று தெரிவித்தார். மம்தா பானர்ஜியின் இந்த பதிவை மேற்கோள் காட்டி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், டெல்லி காவல்துறையின் பதிவை விமர்சித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறிப்பிட்டுதாவது, “இந்தி அல்லாத மொழிகளை தொடர்ந்து குறைமதிப்பும், அடையாளத்தை ஆயுதமாக்கும் ஒரு ஆட்சியின் மனநிலையைக் காட்டும் செயல் இது” என கண்டனம் தெரிவித்தார்.
மேலும், “பன்முகத்தன்மையான இந்தியாவில் மொழி மீது இவ்வாறு செய்யும் தவறுகள் தற்செயலாக கூட அல்ல” எனவும், மம்தா பானர்ஜி மேற்கொண்ட இந்த குரலை தமிழகமும் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.