கிண்டியில் வேலுநாச்சியார் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்

CM open Velunachiyar statue in Guindy

சென்னை, செப்டம்பர் 19:

சுதந்திரப் போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியாரின் சிலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் திறந்துவைத்தார்.

வேலுநாச்சியார் வீரத்தின் பெருமையை வருங்கால தலைமுறைக்கு சமர்ப்பித்து போற்றும் நோக்கில் இந்த சிலை நிறுவப்படுவது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த சிலை ரூ. 50 லட்சம் செலவில் நிறுவப்பட்டு, இன்று காலை முதலமைச்சர் திறந்து வைத்து சிறப்பு மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த வேலுநாச்சியாரின் திருவுருவப் படத்துக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை