நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

CM M.K. Stalin met Nallakannu and inquired about health

சென்னை, ஆகஸ்ட் 29:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு , கடந்த 22-ஆம் தேதி திடீரென தன் வீட்டில் விழுந்து தலையில் காயமடைந்தார். அதன்பின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணு, பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணுவை சந்தித்து அவரின் உடல் நலனைக் கேட்டறிந்தார். மேலும், அவருக்கு தரப்படுகின்ற சிகிச்சைகளின் அறிக்கையை மருத்துவர்களிடமிருந்து பெற்றார். முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு நலம் பெற விரும்புகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!