செங்கல்பட்டு, ஆகஸ்ட் 8:
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சானடோரியம் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரசு தலைமை மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். .
செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ரூ.115 கோடி செலவில் 6 தளங்களில், 400 படுக்கைகளுடன் உயர்மட்ட மருத்துவ வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இன்று நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று, மருத்துவமனை திறப்பு வைத்தார். தொடர்ந்து மருத்துவமனை பாதுகாப்பு, சிறப்பு வசதிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.
அதன் பின்னர் பல்லாவரம் விமான நிலையம் அருகே கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் 20,021 ஏழை எளியவர்களுக்கு ரூ.1672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு 17,74,561 பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு-சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், சேர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.