நடிகர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கினார் முதலமைச்சர்

CM honorary doctorate on actor Sivakumar

சென்னை, நவம்பர் 28:

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவகுமார். இவர் 1965-ம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். 1967-ம் ஆண்டு வெளியான ‘கந்தன் கருணை’ திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்றுத்தந்தது.

இதனை தொடர்ந்து நடிகர் சிவகுமார் கடைசியாக 2001-ம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் நடித்திருந்தார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்த இவர் தற்போது நடிப்பை நிறுத்தி சொற்பொழிவுகளிலும் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில், தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை