திண்டுக்கல், ஜனவரி 07:
திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த விழாவில், ரூ. 1595 கோடியில் 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 111 முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
மேலும், திண்டுக்கல்லில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் 50 புதிய பேருந்து சேவைகளையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
அதேபோல், தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், சக்கரபாணி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.