டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் நெல் கொள்முதல் குறித்து முதல்வர் ஆலோசனை

CM visit Erode today – Transport route changes

சென்னை, அக்டோபர் 02:

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் நெல் கொள்முதல், சேமிப்பு, நகர்வு மற்றும் அரவை தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிதியாண்டுக்கான நெல் கொள்முதல் பணிகளை சீராக முன்னெடுக்க முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் பெரும் கவனம் செலுத்தியுள்ளார். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான முறைகளையும், பரவலாக பெய்து வரும் மழை காரணமாக கிடங்குகளில் நெலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் அரு.சக்கரபாணி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர்கள் வ. தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் நெல் விளைபொருட்களின் தரமும் பாதுகாப்பும் உறுதி செய்ய இத்தகைய ஆலோசனைகள் தொடர்ந்து நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!