தென்காசி, அக்டோபர் 29:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தென்காசி மாவட்டத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் போது ஒரு அரசு விழாவில் கலந்துகொண்டு, மாணவர்களுடன் உற்சாகமாக சிலம்பம் சுற்றினார்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற விழா மற்றும் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் சாலையின் இருபுறம் திரண்டு முதல்வரை அன்புடன் வரவேற்றனர்.
அப்போது சாலையில் சிலம்பம் சுற்றி முதல்வரை மாணவர்கள் வரவேற்றனர். காரில் இருந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின், மாணவ, மாணவிகளுடன் உற்சாகத்துடன் சிலம்பம் சுற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், நான் முதல்வன் திட்டத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவி பிரேமாவுக்கு, கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டை ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, உரிய கவனம் செலுத்தினார்.
மேலும், அனந்தபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து, தென்காசி மாவட்டத்தில் ரூ.1,020 கோடியில் நிறைவேற்றப்பட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார்.
அதேபோல், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழிப்புணர்வையும் முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்தார்.