அமெரிக்கா, ஆகஸ்ட் 26:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் மீது வரிகளை உயர்த்தி வருகிறார். குறிப்பாக அமெரிக்காவின் பிரதான போட்டியாளராக கருதப்படும் சீனா இந்த வரி உயர்வுகளுக்கு கடுமையான எதிர்வினை ஆற்றி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவை நோக்கி கடுமையான எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். வெள்ளை மாளிகளில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகின் பல முக்கிய நாடுகள் மீது அமெரிக்கா வரிகளை உயர்த்தியுள்ள நிலையில், சீனாவுடன் உள்ள வியாபாரப் பிரச்சினைகளுக்கு மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
டிரம்ப், “நாங்கள் கொஞ்சம் கார்டுகளை வெளிப்படுத்தவில்லை. ஆனால் நான் அந்த கார்டுகளை கொண்டு விளையாட விரும்பவில்லை. நான் அதைப் பயன்படுத்தி விளையாடினால், சீனா அழிந்துபோகும்,” எனப் பரபரப்பான பேசியுள்ளார், சீனாவுக்கு எதிரான கடுமையாக வரிகள் விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுக்கு அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை சீனா எடுத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.“அத்தகைய சூழ்நிலையில் சீனா மீது 200 சதவீதம் வரை வரிகள் விதிக்க தயங்கமாட்டேன்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், “இந்த ஆண்டு இறுதியில் அல்லது அதற்குப் பிறகு விரைவில் நான் சீனாவை நேரில் சந்திக்க வருவேன். இரு நாடுகளுக்கும் இடையில் சிறந்த உறவுகள் வளர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன்,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த பேச்சு உலக அரசியலும் பொருளாதாரத்தையும் மீண்டும் சற்று பதற்றத்துடன் எதிர்கொள்ள வைக்கக்கூடியதாக உள்ளது.