சிதம்பரம், ஜூலை 15:
காமராசரின் 123-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக முதலமைச்சர் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ரயில் மூலம் சிதம்பரம் வந்தடைந்தார். அவருக்கு ரயில்வே நிலையத்தில் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, ரயில்வே நிலையத்திலிருந்து கீழரதவீதியில் உள்ள தனியார் விடுதியில் வரை ரோடு ஷோ நடத்தப்பட்டு அப்போது பொதுமக்களிடம் அவர் மனுக்களை பெற்றார்.
பின்னர் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின், காரில் புறப்பட்டு சிதம்பரத்தில் உள்ள ரயிலடி திடலுக்கு அருகிலுள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார். அங்கு, காமராசரின் 123வது பிறந்த நாளையொட்டி அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.