சென்னை, ஆகஸ்ட் 05:
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பாக ரூ.18.26 கோடி செலவில் கட்டப்பட்டு, 30,000 சதுர அடி பரப்பளவுள்ள மூன்று மாடி காவல் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இக்காவல் நிலையத்தில் காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் அறைகள், கைதிகள் அறை, கண்காணிப்பு அறை, பொதுமக்கள் கலந்தாய்வு கூடம், ஆடவர் மற்றும் மகளிர் ஓய்வு அறைகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதன்பிறகு, பெரம்பூர் மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.9.74 கோடி மதிப்பீட்டில் மூன்று மாடி கூடுதல் பள்ளிக் கட்டிடமும் பல வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், கழிப்பறைகள் போன்ற வசதிகளுடன் முதல்வர் திறந்து பார்வையிட்டார். மாணவியர்களுடன் நேரில் சந்தித்து உரையாடினார்.
அதே சமயம், கொளத்தூரில் தீ விபத்து காரணமாக சேதமடைந்த மூன்று நபர்களுக்குத் முதல்வர் புதிய இருசக்கர வாகனங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 17 கோடி 65 லட்சம் மதிப்பீட்டிலான 14 புதிய நகர மேம்பாட்டு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.