22
சென்னை, நவம்பர் 27:
தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அதன் ஒருபகுதியாக 115-வது வார்டில் செயலாளர் கே.ஜி.செந்தில் குமார் ஏற்பாட்டில் அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன. அப்போது துணை செயலாளர் தீபக் குமார், வார்டு அவைத்தலைவர் கே.சுந்தர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் மு.மோகன், பகுதி பிரதிநிதி மு.மகேஷ்வரன், சிறுபான்மை நல பிரிவு ஜலால், வி. மனோகர், ராஜசேகரன், குமார், ச.சுந்தர், மொய்தீன் (படா), கார்த்திக், இலக்கிய அணி துணை அமைப்பாளர் கோபிநாத் திருவல்லிக்கேணி பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் சாஜ்ஜாத் ஆகியோர் உடனிருந்தனர்.