கரூர் கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை தேவை: தவெக வழக்கறிஞர்

மதுரை, செப்டம்பர் 29:

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தற்போது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் உண்மையான காரணங்களையும் பொறுப்பாளர்களையும் கண்டறியவும் சிபிஐ விசாரணை கோரி ஆதவ் அர்ஜுனா மதுரை உயர்நீதீமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தவெக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தவெக வழக்கறிஞர் அறிவழகன் கூறியதாவது, கரூர் கூட்டத்தில் காவல்துறை தங்களைச் சரியானபடி கடமையாற்றாமல் காவல் பாதுகாப்பு தவறியுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு வழங்கல் காவல்துறையின் முக்கிய கடமையாக இருந்தாலும் அதில் தோல்வி ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்ததற்குப் பின்னால் காவல்துறையினர் தடியடி மற்றும் தவறான நடவடிக்கைகள் காரணமாக உள்ளனர்.

மேலும், கூட்டத்தில் மர்ம நபர்கள் செருப்பு வீசி தவெக தொண்டர்களை தாக்கியதாகவும், இதற்கு போலீசாரும் இணைந்து செயல்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் உடல்களை இரவு நேரத்தில் சட்டவிரோதமாக பிரேத பரிசோதனை செய்ததற்கும் கேள்விகள் எழுந்துள்ளன. முன்கூட்டியே ஆம்புலன்ஸ்களை நிறுத்திவைத்ததும், போதுமான காவலர்கள் பணியமர்த்தாது தேர்தல் பிரசாரத்தை நடத்தப்பட்டதும் இந்த பெரிய சோகம் இடம்பெற காரணமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்து விசாரணைகளும் சிபிஐ கைடுப்பில் விசாரணை நடைபெற்றால் மட்டுமே உண்மைகள் வெளிவரும் என்பதைகூட தவெக வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!