21 மாவட்டங்களில் புற்றுநோய் பரிசோதனை! தங்கம் தென்னரசு

Cancer screening in 21 districts - Thangam Thennarasu

சென்னை, பிப்ரவரி 17:

தமிழகத்தில் இதுவரை 21 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

மருத்துவத் துறையில் அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசிய அமைச்சர்,”தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் வகையில், புற்றுநோய் கண்டறியும் முகாம்கள் இதுவரை 21 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளன.

இவற்றில் கலந்துகொண்ட 79.17 லட்சம் நபர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டதில் 1,929 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் உரிய சிகிச்சை பெற்று வருகின்றனர். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலமாக குணப்படுத்த முடியும்.

கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 14 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா புற்றுநோய் மையம் 398 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை