இனி 10 ரூபாய் பழனிசாமி என்று அழைக்கலாமா? – செந்தில் பாலாஜி

Can we call 10 rupees Palaniswami from now on? - Senthil Balaji

கரூர், அக்டோபர் 01:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த மாதம் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானர், இதில் கரூர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

செந்தில் பாலாஜி கூறியதாவது, “இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் வைக்கப்பட்டவை. இது உண்மை அடிப்படையற்றதாக இருந்து, மக்களை தவறான கருத்துகளில் முன்னெடுக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரையிலான நேரத்தில் ரூ. 10க்கு கீழ் வசூலிக்கப்பட்ட 7,540 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் ரூ. 10க்கு மேல் வசூலிக்கப்பட்ட 8,666 புகார்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ. 14,000 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

2021-இல் திமுக ஆட்சியில் ரூ.10க்கு கீழ் 18,253 புகார்கள் மற்றும் 10க்கும் மேல் 2,356 புகார்கள் செய்துள்ளன. இதனால் ரூ. 8 கோடியும் 51 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த வசூலிப்பில் அதிகபட்சமாக பழனிசாமி ஆட்சி காலத்தில் வசூல் செய்யப்பட்டதைத் தவிர்க்க முடியாது என்பதை நான் கூற விரும்புகிறேன்.

இந்த 5 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகை ஒருவருக்கு செல்கிறது என்றால், அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் சென்றிருக்கும். இனிமேல் பழனிசாமியையும் 10 ரூபாய் பழனிசாமி என்று அழைக்கப்படலாம்.

எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றே அவதூறுகளைப் பரப்புகிறார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பின்னர், இது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்கிறேன்” என்றார்

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!