நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 18 பேர் பலி

Bus falls into river in Nepal, 18 dead

காத்மண்டு, பிப்ரவரி 23:

நேபாளத்தில் இன்று அதிகாலை போகாராவில் இருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் பயணிகள் 44 பேர் இருந்தனர். பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் பயணிகள் 18 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 8 பெண்கள் 18 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட மொத்தம் 27 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து சுக்கு நூறாக உடைந்துள்ளது. இந்த விபத்து அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியுள்ளோம்: டொனால்டு டிரம்ப்

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம்

இந்தியாவுக்கு 10% வரி விதிப்புகள் – டிரம்ப் அறிவிப்பு