சென்னை, ஜூலை 9:
கோவை பீளமேடு, ஹோப் கல்லூரி அருகே ரயில்வே மேம்பாலம் பகுதியில் இரும்பு பாலம் அமைக்கும் பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளன. இதனால், கோவை வழியாக செல்லும் 7 ரயில்கள் போத்தனூர்-இருகூர் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
நாளை முதல் 13-ந் தேதி வரை கீழ்க்கண்ட ரயில்கள் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது: இதனால் திருவனந்தபுரம்-மைசூரு தினசரி விரைவு ரயில் மற்றும் கன்னியாகுமரி-திப்ரூகர் விரைவு ரயில் , 11-ந் தேதி விசாகப்பட்டினம் – கொல்லம் வாராந்திர விரைவு ரயில், 13-ந் தேதி காரைக்கால்-எர்ணாகுளம் தினசரி விரைவு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் நீலகிரி தினசரி விரைவு ரயில்கள் இருகூர்-போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,12-ம் தேதி கன்னியாகுமரி-ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கட்ரா வாராந்திர விரைவு ரயில் மற்றும் 13-ந் தேதி எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர விரைவு ரயில் இவை போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படுவதாகவும், கோவை ரெயில் நிலையம் செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.