லடாக்கில் பாஜக அலுவலகத்திற்கு தீ வைப்பு

BJP office set on fire in Ladakh

லடாக், செப்டம்பர் 24:

யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கி அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதற்கான கோரிக்கை வலியுறுத்தி கடந்த 10-ஆம் தேதி இருந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டம் தொடர்பாக மத்திய அரசு அடுத்த மாதம் 6-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், இன்றைய காலையில் லடாக்கில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டோர் மற்றும் போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.

மேலும், மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் அங்கே பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்

Related posts

திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த இறுதி முடிவு கார்கேவிடம் ஒப்படைப்பு

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்