தமிழகத்திலும் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடலாம்: திருமாவளவன்

BJP may vote rigging in Tamil Nadu: Thiruma

பெரம்பலூர், செப் 01:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் எதிர்கால தேர்தல்களில் பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் முறைகேடு உத்திகள் மூலம் வாக்குத் திருட்டு செய்வதற்கான அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார். பீகார் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற திருத்தங்கள், வாக்காளர்களை நீக்குதல், அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களை சேர்த்தல் போன்ற செயல்கள் இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத அநீதி என்றார்.

கடந்த சில மாநிலத் தேர்தல்களில் வாக்குத் திருட்டு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பேசி வருகின்றார். பீகாரில் நடந்துள்ள வாக்காளர் உரிமை பயணத்தை, விதிகளை கேட்பதற்காக அவர் செய்துள்ள முயற்சியை திருமாவளவன் பாராட்டினார். வாக்காளர் பட்டியலில் பெயர்களை முறையற்ற வகையில் நீக்குவது, சேர்ப்பது போன்ற மாற்றங்களை பாஜக தன் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையம் மூலம் செயல்படுத்துகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த வாக்குத் திருட்டு முயற்சி தமிழகத்தில் அதிகமாய் ஏற்படும் வாய்ப்பு உண்டு என்பதைக் கூறிய அவர், மக்கள் விழிப்புணர்வுடன் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், பாசிச போக்கீட்டும் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் திட்டமிடப்படுகிறது என்றும் அறிவுறுத்தினார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!