மத்திய அமைப்புகளை பாஜக தவறாக செயல்படுத்துகிறது – முதலமைச்சர் குற்றச்சாட்டு

Tamil Nadu cabinet meeting on February 5th!

சென்னை,டிசம்பர் 16:

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது, ”நேஷனல் ஹெரால்டு வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து மத்திய பாஜக அரசு, மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துகிறது. இதனை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. எந்தவொரு சட்ட அடிப்படையும் இல்லாமல், இதுபோன்ற வழக்குகள் அரசியல் எதிரிகளை துன்புறுத்துவதற்கும் அவமானப்படுத்துவதற்கும் மட்டுமே போடப்படுகின்றன.

உண்மை அவர்கள் பக்கம் இருப்பதால், ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் பழிவாங்கும் அணுகுமுறையால் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மைக்கு களங்கம் ஏற்படுகிறது. அத்துடன், அவற்றை அரசியல் மிரட்டலுக்கான கருவிகளாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!