எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை

BJP election officials hold meeting with EPS

சென்னை, அக்டோபர் 07:

அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் அதிமுக மற்றும் பாஜக இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம், கூட்டணி விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கான பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர்கள் பைஜேந்த் பாண்டா , முரளிதர் மொஹோல் மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சென்னையில் இருந்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு வருகை தந்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதி பங்கீடு, கூட்டணியில் மற்ற கட்சிகளை இணைப்பது மற்றும் தேர்தல் கூட்டமைப்புகளைப் பற்றி தனிப்பட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கூட்டணியில் வெற்றி பெற்றால் அதன் பிறகு ஆட்சி அமைக்கும் உரிமை மற்றும் அதிமுக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பு போன்ற விஷயங்களில் இரு கட்சிகளுக்கும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை நேற்று தனித்தனியே எடப்பாடி பழனிசாமியும், பாஜக மேலிடப் பொறுப்பாளர்களும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை

கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை!