சென்னை, ஜூலை 9:
சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தலைமைச் செயலக காலணி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தலைமை செயலக காலணி போலீசார் நேற்று குன்னூர் நெடுஞ்சாலை பகுதியில் வைத்து மூன்று பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ஓட்டேரி எஸ் எஸ் புரம் ஏ பிளாக் ஆறாவது தெருவை சேர்ந்த குணசேகரன் 45 அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்கின்ற பண்டாரம் 29 புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த கோகுல் குமார் 30 என்பது தெரிய வந்தது இதில் கோகுல் குமார் மீது ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகளும் அரவிந்த் மீது மூன்று குற்ற வழக்குகளும் குணசேகரன் மீது ஆறு குற்ற வழக்குகளும் உள்ளது. குணசேகரன் ஓட்டேரி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடி பிரிவில் உள்ளார்
மேலும் பாரதிய ஜனதா கட்சியில் வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார் குணசேகரன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவரது வீட்டில் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்பு ஓட்டேரி ஏரியாவில் இருந்து தலைமை செயலக காலனி ஏரியாவில் தனது கஞ்சா பிசினஸை தொடர்ந்தார் குணசேகரன் செய்து வந்துள்ளார் தனது அடியாட்களை வைத்து ஆந்திராவிற்கு சென்று கஞ்சாவை வாங்கி வந்து அதனை சிறுசிறு பொட்டலங்களாக பிரித்து ஓட்டேரி புளியந்தோப்பு ஆகிய பகுதியில் விற்பனை செய்து வந்தது போலீசார்ரின் விசாரணையில் தெரியவந்தது இதனை யடுத்து கைது செய்யப்பட்ட குணசேகரன். அரவிந்த். கோகுல் குமார் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த தலைமைச் செயலக காலணி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.