திராவிட மாடல் அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

International Mother Language Day - Nainar congrats

சென்னை, ஜூலை 12:

தமிழகத்தை வதைக்கும் மக்கள் விரோத திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவோம் !

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மதுரை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான கட்டங்களுக்கு வரிவிதிப்பு முறைகேடாக நிர்ணயிக்கப்பட்டு கிட்டத்தட்ட ₹150 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது. நாடு போற்றும் நல்லாட்சி என்று பெருமை பேசும் அரசு, முறைகேடுகளைத் தடுக்கத் தவறிவிட்டு, தற்போது மண்டல் தலைவர்களை ராஜினாமா செய்ய வைத்து முறைகேட்டை மறைக்கப் பார்க்கிறது.

சொத்து வரியை உயர்த்தி மக்களை வதைத்தது போதாதென்று முறைகேடுகளால் மக்கள் வரிப்பணத்தையும் சூறையாடும் திமுக அரசை எதிர்த்து மாபெரும் கண்டனப் போராட்டத்தை நமது சார்பாக மதுரையில் முன்னெடுக்க உள்ளோம். இன்று காலை 10 மணிக்கு மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி, புதூர் பேருந்து நிலையம் அருகில் நமது மதுரை மாவட்ட பாஜக சொந்தங்களுடன் இணைந்து போராட உள்ளேன். திமுக அரசின் ஊழல் முகத்தை எதிர்த்து நடைபெறும் இப்போராட்டத்தில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்வோம்! அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தை வதைக்கும் மக்கள் விரோத திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவோம்! என கூறியுள்ளார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை