பில் கேட்ஸ் ஆந்திரா வருகை: சந்திரபாபு நாயுடுவுடன் முக்கிய ஆலோசனை

Bill Gates visits Andhra : Discussions with Chandrababu NaidU

ஆந்திரா, பிப்ரவரி 16:

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இன்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதில் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த சந்திப்பில், குப்பம் பகுதியில் கேட்ஸ் அறக்கட்டளை ஏற்கனவே செயல்படுத்தி வரும் சுகாதாரத் திட்டங்களை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகளை உருவாக்கும் ‘சஞ்சீவனி’ திட்டம் பற்றி அதிகாரிகள் விளக்கம் அளிக்கிறார்கள்.

மேலும், ஆந்திர அரசின் ரியல் டைம் கவர்னன்ஸ் சிஷ்டம் (RTGS) மையத்தை பில் கேட்ஸ் பார்வையிட்டு, தொழில்நுட்பம் மூலம் நிர்வாகத்தை எவ்வாறு மேம்படுத்துகின்றனர் என்பதை அறிகிறார். உந்தவல்லி கிராமத்தில் விவசாயத்தில் டிரோன் மற்றும் ஏஐ பயன்பாடு குறித்தும் அவர் ஆய்வு செய்கிறார்.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது ‘ஸ்வர்ண ஆந்திரா 2047’ தொலைநோக்கு திட்டத்தையும் பில் கேட்ஸிடம் விளக்குகிறார். இந்த வருகை மூலம் சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பில் கேட்ஸின் மூன்றாவது ஆந்திர பயணமாகும்.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு