ஓடிசா, செப்டம்பர் 08:
கடந்த ஜூலை 21 அன்று உடல் நலக்குறைவு காரணமாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் திடீரென துணை ஜனாதிபதி பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இதன்பின் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கபட்டார். எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சார்பிலும் முன்னாள் சுப்ரீம் கோர்டு நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார். இருவரும் கடந்த மாதம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து, பாராளுமன்ற இரு அவைகளிலும் உள்ள எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். பா.ஜ.க. கூட்டணி 422 எம்.பி.க்களை கொண்டிருப்பதால், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பெரும்பான்மையுடன் வெற்றி உறுதி என்ற நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையில், நாளை நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. பிஜு ஜனதா தளம் மாநிலங்களவையில் 7 எம்.பி.களை கொண்டுள்ளது. அக்கட்சியின் எம்.பி. சஸ்மித் பத்ரா, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிகளிடையேயே சம தூரத்தில் தாங்கள் இருப்பதையும், ஒடிசாவின் வளர்ச்சிக்கான கவனத்தை முன்னிலைப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பிஜு ஜனதா தளம் துணை ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்பதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளது.