வாக்காளர் பட்டியல் திருத்தம்: நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட கோரி மனு

Karur stampede: Tamil Nadu government opposes CBI probe

டெல்லி, ஆகஸ்ட் 06:

பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 7.24 கோடி வாக்காளர்கள் மட்டும் திருத்தத்துக்காக விண்ணப்பித்தனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதைக் கொண்டு, விண்ணப்பிக்காத 65 லட்சம் முறையான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என தெரிய வந்துள்ளது. ஆனால், நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

இந்த நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஆர்.டி.ஆர்) என்ற அமைப்பு, நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர் விபரங்களை வாக்குச்சாவடி வாரியாக வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் தகுதியான வாக்காளர்கள் தவறுதலாக பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை அரசு மற்றும் பொதுமக்கள் தெளிவாக அறிந்துகொள்ள முடியும் என்பதை இந்த மனு வலியுறுத்துகிறது. மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த இறுதி முடிவு கார்கேவிடம் ஒப்படைப்பு

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்