டெல்லி, அக்டோபர் 06:
பீகார் மாநில சட்டசபையில் 243 தொகுதிகளில் நடக்கும் 2025 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரண்டு கட்டங்களில் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார். தேர்தல் நடப்பதற்கான முழு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடைசி இரண்டு சுற்று வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன், தபால் வாக்குகள் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும்.
பீகார் மாநிலத்தில் சுமார் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3.92 கோடி ஆண் வாக்காளர்கள், 3.5 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 14 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். வயது 100க்கும் மேற்பட்ட 14 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 90,712 வாக்கு மையங்கள் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. எந்தவொரு வன்முறையையும் அனுமதிக்க மாட்டேன் என்று நிர்வாக அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சமூக வலைதளங்கள் மற்றும் இணைய தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் பொருட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. நவம்பர் 6 முதல் கட்ட வாக்குப்பதிவு, நவம்பர் 11 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
முதல் கட்டத் தேர்தலுக்கு நவ. 10 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு நவ. 13 ஆம் தேதியும் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. முறையே, நவ. 17, 20 வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாளாகும்.
நவம்பர் 14 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
