வங்கதேசம், நவம்பர் 17:
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாக்கு எதிராக நடைபெற்ற 2024 மாணவர் போராட்ட வன்முறையில் அவர் முக்கிய குற்றவாளியானதாக வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் மாணவர்கள் மீது சுட்டுக்கொல்லும் நடவடிக்கைகள், ஆயுதம் பயன்படுத்தி சொந்த நாட்டின் மக்களை கொலை செய்தல் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தக்கவிடப்பட்டன. நீதிபதிகள், ஷேக் ஹசீனா இந்த கொலைகளுக்கான மூளையாக இருந்தார்; அரசுக்கு எதிரான போராட்டங்களை முற்றிலும் அழிக்க அவர் உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனிடையே அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்த தீர்ப்பால் வங்கதேசம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, தலைநகர் டாக்காவில் ராணுவம் மற்றும் காவல்துறை களமிறக்கப்பட்டுள்ளன.
மாணவர்களை ஒடுக்க அவர் ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியதால் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, 2,500 பேர் காயமடைந்தனர்.
மேலும், அவர் மற்றும் அந்தக் காலத்தின் உள்துறை அமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோர் இணைந்து அமைதியான போராட்டங்களை முற்றிலும் அழிக்க உத்தரவிட்டதாகவும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பால் வங்கதேச அரசியல் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு, சர்வதேச பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.