ஜெகன் மோகனை “சைக்கோ” என விமர்சித்த பாலகிருஷ்ணா

Balakrishna criticizes Jagan Mohan as a "psycho"

ஆந்திரபிரதேசம், செப்டம்பர் 27:

ஆந்திரபிரதேச சட்டசபையில் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ மற்றும் நடிகர் பாலகிருஷ்ணா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை “சைக்கோ” என பேசியதால் பரபரப்பு எழுந்தது.

இந்த விமர்சனத்தைக் கேட்டு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஆவேசத்தில் சட்டசபையில் இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.

பாஜக எம்.எல்.ஏ காமினேனி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது, “முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில், முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர்களை சந்திக்க ஜெகன் நேரம் ஒதுக்கவில்லை. சிரஞ்சீவி குரல் எழுப்பிய பிறகு மட்டுமே அவர் நேரம் ஒதுக்கினார்” என்றார்.

இதனை எதிர்த்து பாலகிருஷ்ணா குறுக்கிட்டு, “தெலுங்கு நடிகர்கள் ஒரு ‘சைக்கோ’வை சந்திக்க சென்றனர்” என்ற விமர்சனம் பரபரப்புக்கு காரணமானது. மேலும், அவர் கூறியது, “சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின்னர் தான் தெலுங்கு நடிகர்களை ஜெகன் சந்தித்தது என்றது பொய்யான கூற்றாகும்” எனத் தெரிவித்தார்.

இதனைப் பற்றி நடிகர் சிரஞ்சீவி, “ஜெகன் மோகன் அழைப்புறுதி அடிப்படையில் அவரது வீட்டுக்கு சென்றேன். தெலுங்கு திரையுலகத்தின் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவரிடம் விளக்கமளித்தேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த இறுதி முடிவு கார்கேவிடம் ஒப்படைப்பு

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்