சென்னை, அக்டோபர் 02:
கடந்த சனிக்கிழமை கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வின் பின்னர், கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை நிகழ்ச்சி நடந்தது.
கரூர் நெரிசல் சம்பவத்தைத் கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையில், சம்பவம் குறித்து விளக்கம் அளித்து, விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் 5 நிமிடங்களுக்கு பேசும் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் விஜயின் பிரசாரப் பேருந்து மற்றும் பிரசார வேன் போன்றவற்றிற்கு ஆயுத பூஜை செய்து வழிபாடு நடந்தது.
கரூர் சம்பவத்தின் பின்னர் அரசியல் சூழல் இன்னும் பரபரப்புடன் பதட்டமாக இருக்கும்போது, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.