குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய விருதுகள்!

Awards presented by CM M.K. Stalin at the Republic Day ceremony!

சென்னை, ஜனவரி 26:

77-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் நீலகிரி தீயணைப்பு வீரர்கள் சங்கர், சுரேஷ், ரமேஷ்குமாருக்கு வழங்கப்பட்டது. மேலும் வீரதீர செயலுக்கான பதக்கம் கன்னியாகுமரியைச் சேர்ந்த மறைந்த பீட்டர் ஜான்சனின் குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது.

மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது திருப்பூரைச் சேர்ந்த கலிமுல்லாவுக்கு வழங்கப்பட்டது. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தஞ்சையைச் சேர்ந்த வீரமணிக்கு வழங்கப்பட்டது.

இவைத்தவிர ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர் என 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. மதுரை மாநகர காவல் நிலையத்திற்கு சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது.

திருப்பூர் மாநகரம், கோவை காவல் நிலையங்களுக்கு இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!