சட்டசபை தேர்தல் – தவெக சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்

Assembly elections - Application forms for candidates will be distributed by the TVK party starting today.

சென்னை, பிப்ரவரி 06:

சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகியுள்ளது. தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் த.வெ.க. ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், தேர்தலை தனித்து சந்திப்பதா? கூட்டணி அமைத்து போட்டியிடு வதா? என்று த.வெ.க. முடிவு செய்யாத நிலையில் இருந்து வருகிறது.

இந்தநிலையில், த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பெறப்பட இருக்கிறது. இதற்கான பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வாங்கப்பட உள்ளது.

14-ந்தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்று த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுக்களை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வாங்குவதற் காக மாநில நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விடம் தொண்டர்கள், நிர்வாகிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க உள்ளனர்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!