சென்னை, ஆகஸ்ட் 06:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதில் 26 பேர் குண்டர் சட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.
இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து, நாகேந்திரன் உள்ளிட்ட 17 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், அவை சீராக பரிசீலிக்கப்படாமல் “இயந்திரதனமாக” உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், கைதுகளுக்கும் குண்டர் சட்ட நடவடிக்கையுக்கும் இடையே கால தாமதம் உள்ளது என்பதையும் மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 26 பேரும் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கும் அச்சுருத்தலாக இருப்பதை கொள்ளை ஆராய்ந்தே குண்டர் சட்டத்தில் நடத்தியதாக காவல்துறையினர் சார்பில் வாதிடப்பட்டது.
இவ்விவகாரத்தில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற 17 பேர் மீது விதிக்கப்பட்டிருந்த குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த ரத்து காரணமாக அவர்களுக்கு தானாகவே ஜாமீன் வழங்கக்கூடாது என்றும், குற்ற வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டே ஜாமீன் மனுக்களில் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.