பாமகவில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு

Ramdas planning to meet Amit Shah in Delhi?

விழுப்புரம், செப்டம்பர் 11:

பாமகவில் தீவிர கருத்து மோதல் காரணமாக கட்சியின் முன்னணி தலைவர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. செயல்தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்யை நீக்குவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அவர் செப்டம்பர் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்கக் வேண்டிய நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அன்புமணி எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதனால் செப்டம்பர் 4-ந் தேதி ராமதாஸின் தலைமையில் உள்ள மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் மீண்டும் அன்புமணிக்கு பதில் அளிக்க செப்டம்பர் 10-ந் தேதிக்குள் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க சொல்லப்பட்டுள்ளது. இதற்கும் பதில் இல்லை என்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் கூறியதாவது, அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்னும் வேலையை உறுதி செய்துள்ளதாகவும், அவர் கட்சி தலைமைக்கு கட்டுப்படாமல் அரசியலில் தகுதியற்ற முறையில் செயல்பட்டவர் எனக் கூறினார்.

இதனையடுத்து, அன்புமணி ராமதாஸ் பா.ம.க. செயல்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சி நிர்வாகிகள் அவருடன் தொடர்பு கொள்ளக் கூடாது; தொடர்பு கொள்ளுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!