அன்புமணி விளக்கம் அளிக்க காலக்கெடு நீடிப்பு

3 MLA supported Anbumani have been expelled from the PMK.

விழுப்புரம், செப்டம்பர் 03:

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான எதிர்மறை நிலைமை தீவிரமடைந்து வருகிறது. அன்புமணி மீது வைக்கப்பட்டுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காததால் அவர் மீதான கட்சி நடவடிக்கைகள் நாளை ராமதாஸ் தலைமையில் எடுக்கப்பட உள்ளதாக பாமக வட்டாரத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில், நேற்று விழுப்புரம் மாவட்ட தைலாபுரத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்ந்த மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிட்டார். அங்கு அன்புமணி மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கட்சியில் அவர் காட்டு வரும் எதிர்ப்புகள், மற்றும் 2026 தேர்தல் குறித்து விரிவான ஆலோசனை நடந்தது. இதில் அன்புமணி தரப்பின் 16 குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை என்பதையும், அதனால் அவரது மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்ததையும் நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ராமதாஸின் செய்தியாளர் சந்திப்பில், ஆகஸ்டு 31-ம் தேதி முடிவடைய வேண்டிய காலக்கெடு முடிவதற்குள் அன்புமணி பதில் அளிக்காததால், மீண்டும் செப்டம்பர் 10-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!