40
செங்கல்பட்டு, ஜூலை 16:
பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சித் தலைமைத் தகராறு நீடித்து வருகின்றது.கட்சியில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வரும் நிலையில், இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் போட்டி கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாமக தொடங்கி இப்போது 37-வது ஆண்டு கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்டுக் கூறும் வகையில், மாநில அரசில் பாமக பங்கேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் இன்று வலியுறுத்தியுள்ளார்.
அதனுடன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மனைவி சவுமியா அன்புமணியும் சாமி தரிசனம் மேற்கொண்டார்.