பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை: முதல்வர் தொடங்கி வைத்தார்!

anbukarangal scheme launch by TN CM

சென்னை, செப்டம்பர் 15:

பெற்றோரை இழந்த, அல்லது ஒரு பெற்றோரைக் கொண்டு பராமரிக்க முடியாத குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, 18 வயதுக்குள் பள்ளி கல்வியை இடைநிறுத்தம் இல்லாமல் தொடர, கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கினார். காணொலி வாயிலாகவும் மாவட்டங்களில் இதை தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இதில் பங்கேற்றார்.

மேலும், பெற்றோர் இருவரையும் இழந்த பல்வேறு உயர்கல்வி மாணவர்களுக்கு அரசு வழங்கும் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மடிக்கணினிகளை வழங்கி ஊக்குவித்தார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை