சென்னை,ஜூலை 07:
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் தொடர்பான கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து போலீசார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் நீதி விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 1-ஆம் தேதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக அறிவித்தார். இன்று அந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம், விரைவில் திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.