சென்னை, ஜூலை 9:
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தை கண்டித்தும், கொலை வழக்கை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்திருந்தது.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், தவெக சார்பில் போலீசாரின் அனுமதி மறுப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தவெக போராட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, போலீசார் சென்னை சிவானந்தா சாலையில் வரும் 13-ம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளனர்.இந்த போராட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.