சென்னை, ஜூலை 7:
அஜித்குமாரின் மரணம் தொடர்பான தவெக-வின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கோரி, தவெக கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கடந்த ஜூலை 3-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்த நிலையில் தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யபட்டுள்ளது.ஆனால், சமீபத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில், அஜித்குமார் மரண சம்பவம் தொடர்பான தவெக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.