அ.தி.மு.க திராவிட கட்சியே அல்ல – செல்வபெருந்தகை

AIADMK is not a Dravidian party - Selvaperundhakai

சென்னை, ஜூலை 10:

தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க சீரமைப்பு குறித்து மாவட்ட அளவிலான முதன்மை பயிற்சியாளர்கள் அறிமுகக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரஸ் இயக்க சீரமைக்க, பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் கிராம கமிட்டி முதன்மை பயிற்சியாளர்கள் 100 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எவ்வளவு வலிமையாக உள்ளது அதை மேற்கோள் காட்டித்தான் தேசிய தலைமை திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவார்கள்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலேயே கோயில் நிதியிலிருந்து கல்வி நிறுவனங்கள் கட்டினார்கள். அதனை திமுக ஆட்சியில் அமைச்சர் சேகர் பாபு செய்து வருகிறார். பா.ஜ.க , ஆர்.எஸ்.எஸ். எழுதி கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி வாசிக்கிறார். அதிமுக திராவிட கட்சி அல்ல என்றும் அவர் விமர்சித்தார்.

ஜெயலலிதா அவர்களை பழித்து பேசியவர்களுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகால போலீஸ் காவலில் மரணமடைந்தவர்களை த.வெ.க தலைவர் விஜய் சந்திப்பாக கூறுவதை பார்த்தால் அவர் அரசியல் செய்வதாக தெரிகிறது. அவரின் அரசியல் வேறு, எங்கள் அரசியல் வேறு.

2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் சிறப்பு வழிபாடு ரத்து செய்யப்பட்டது. என்னுடைய தொகுதி என்னுடைய கிராம கோயில் வல்ல கோட்டை கோயில் எனக்கு நடைபெற்ற நிகழ்வை நானே பெருந்தன்மையோடு விட்டுவிட்டேன் . இதை சிறப்பு வழி என தமிழிசை பொய் சொல்கிறார் எனவும் செல்வபெருந்தகை கூறினார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!