அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு?

சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு என்ன என்பது குறித்து அவரது வேட்புமனுவின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, எடப்பாடி பழனிசாமியிடம் அசையும் சொத்து, ரொக்கம் 50 ஆயிரம் ரூபாயும், 100 கிராம் தங்க நகைகளும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவசாய நிலங்கள் எதுவுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 லட்சம் ரூபாய் கடன்கள் இருப்பதாகவும் வேட்புமனுவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மனைவி ராதா பெயரில் 8 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் பண்ணை வீடு இருப்பதாகவும், மனைவி பெயரில் உள்ள மொத்த சொத்து மதிப்பு 3.45 கோடி ரூபாய் எனவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் மீது 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED NEWS

Latest News