16
சென்னை, ஜூலை 8:
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா கடந்த மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இருவரின் ஜாமின் மனுக்களை முதலில் தள்ளுபடி செய்த சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், இதன்பின், நடிகர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நடிகர்கள் இருவரிடமும் விசாரணை முடியும் நிலையில் உள்ளதால் சென்னை உயர்நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.