திமுகவில் இணைந்த நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர்

Actor Vijay's former manager joins the DMK

சென்னை, டிசம்பர் 11:

நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வகுமார். கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பிடி செல்வகுமார், சமீப காலமாக விஜய்யை விமர்சித்து பேட்டி அளித்து வந்தார். “விஜய்யுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன்.விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது என்று கூறினார்.

மேலும், விஜய்யைச் சுற்றி நிறைய சகுனிகள் இருக்கிறார்கள். அவர்களை விஜய் அடையாளம் காண வேண்டும். நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் சமீபத்தில் பேசியிருந்தார். இந்த நிலையில்தான், இன்று பி.டி செல்வகுமார், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!