ஸ்பெயினில் நடைபெறவிருக்கும் கார் பந்தயத்துக்கு தயாராகும் நடிகர் அஜித்குமார்

Actor Ajith Kumar in 24H car race in Spain

குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு கார்பந்தயங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், கடந்த ஆண்டு முதல் தீவிரமாக கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனம் மூலம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பரிசுகளும் வென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் இன்றும் நாளையும் ஸ்பெயினில் நடைபெறும் க்ரெவென்டிக் 24H கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார். இதற்கான அவர் புகைப்படங்கள் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த போட்டியில் கலந்துகொள்ளும் அஜித்குமார் திரையுலகிலும், விளையாட்டு உலகிலும் தன்னை முன்னணி தன்மையில் நிலைநாட்டி வருகின்றார். தமிழ் ரசிகர்களுக்கு இது பெரும் உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.

Related posts

ரஜினி – கமல் படத்தின் புரோமோ!

மகா சிவராத்திரி விழா – நடிகைகள் தமன்னா, ஸ்ரீநிதி, சாரா பங்கேற்பு

“ஜனநாயகன்” படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு வாபஸ்