திருவள்ளூர், அக்டோபர் 01:
எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் வருத்ததையும் ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி வட்டத்தின் மீஞ்சூர் அடுத்த ஊரணமேடு கிராமத்தில் உள்ள பொருளாதார மண்டலத்தில் நடைபெற்று வரும் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியின் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இங்கு இரு யூனிட்களில் 660 மற்றும் 1320 மெகாவாட் மின் உற்பத்திக்கு ஏற்ப கட்டுமானப் பணிகளுக்கு 1,000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலையில், ராட்சத முகப்பு சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீர் சாரம் சரிந்து கீழே விழுந்ததால் 9 பேர் பலியாகினர். மேலும் இருவர் தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக காட்டூர் போலீசார் ஒப்பந்ததாரர்கள் ரித்தீஷ் குப்தா, அனுப் மற்றும் சுமீத் மணிகண்டன் ஆகியோருக்கு எதிராக 2 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளது.
இந்த விபத்தில் பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.10 இலட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அனல் மின் திட்டங்களின் பாதுகாப்பு முறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது அரசியல் மற்றும் தொழிலாளர் அமைப்புகளின் கேள்வியாக எழுந்துள்ளது.