கைவிட்ட ஓபிஎஸ்: மீண்டும் அதிமுகவில் இணைந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

Abandoned OPS: Kolathur Krishnamurthy rejoins ADMK

சென்னை, பிப்ரவரி 28:

முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவில் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் என உயர்மட்ட பொறுப்புகளை வகித்தவருமான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவை ஒருங்கிணைப்பதே தனது லட்சியம் என்று பேசி வந்தார்.

ஆனால், அவரது அணியில் இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து வெளியேறி திமுகவில் இணைந்தனர். இதனால் தனித்துவிடப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், நேற்று திடீர் திருப்பமாக திமுகவில் இணைந்தார்.ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது, அவருடன் செயல்பட்டு வந்த ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

Related posts

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து

காங்கிரஸுக்கு ஒரு எம்.பி. சீட் தருவதாக ஸ்டாலின் உறுதி – செல்வப்பெருந்தகை

தொகுதிப்பங்கீடு குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை தீவிரம்!!